சனி, 21 மார்ச், 2015

இராமனுஜர்

திருவரங்க ஆலயம் பற்றியும் விழாக்கள் பற்றியும் ஆழ்வார்கள் பற்றியும் தெரிந்தோம் இருப்பினும் இராமனுஜர் பற்றி இங்கு சிறிது தெரிந்ஹ்டு அவரின் அரங்கன் சேவையையும் மற்றும் வைணவ ஆலயங்களுக்கு அவர் ஆற்றிய இறைத்தொண்டையும் தெரிந்து மகிழ்வோம்ஆழ்வார்கள் தொகுப்பிற்கு பிறகு எழுதியிருக்கலாம் சற்று விரிவாக எடுத்துரைப்பதற்காக தனி அத்தியாயமாக எழுதுகிறேன் 

திருவரங்க பெருமாள் மீது அதிக பக்தி ஈடுபாடு அக்கரை கொண்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் இராமனுஜர். இவரைப்பற்றி எழுதவில்லை என்றால் இச்சிறுபுத்தகம் நிறைவு பெறாது.

இராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூரில் அவதாரம். தந்தை கேசவ பெருமாள் தாயார் காந்திமதி அம்மாள் இளமைக்காலத்தில் வேதங்கள் அனைத்தும் கற்றுத்தேர்ந்தார் திருமணம் நடந்தது. காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பிகளிடம் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் மனைவி பெயர் தஞ்சமாள். இவர் திருகச்சி நம்பிகள் பால் போதுமான மரியாதையுடன் நடக்காதது இவர் துறவு பூணக்காரணமாய் அமைந்தது.

முதலில் யாதவப் பிரகாசரிடம் கல்விகற்றார் ஆனால் இவரே இராமானுஜருக்கு விரோதமாக நடந்தும் இவரைக் கொலை செய்யவும் எண்ணினார். இதை அறிந்த இராமனுஜர் மனம் வருந்தி பல தலங்கள் சென்று திருவரங்கம் வந்தடைந்து திருவரங்க  ஆலய நிர்வாகத்தில் சிறப்பான சீர் திருத்தங்கள் செய்துவந்தார். இங்ஙன மிடுக்கையில் திருக்கோஷ்டியூரில் நம்பிகள் என்ற பெரியவரிடம் திரு மந்திர உபதேசம் பெற விழைந்தார். திருகோஷ்டியூர் சேத்திரம் வைணவர்கள் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டிய தலமாகும். இங்கே பெருமாள் நின்றும் இருந்தும் கிரந்தும் என மூன்று நிலைகளில் சேவை சாதிக்கிறார். ஆனால் பெரியவர்  இவருக்கு திருமந்திரத்தை உபதேசிப்பதாகக் கூறி காலம் தாழ்த்திவந்தார்கள். இதன் காரணமாக பதினெட்டு முறை சீரங்கத்திலிருந்து திருகோஷ்டியூருக்கு பயணம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. ஓர் நாள் நம்பிகள் திருமந்திரத்தை ஒரு உறுதி மொழியின் பேரில் உபதேசித்தருளினார். இம்மந்திரத்தை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது என்பதுதான் அது. இதை இராமானுஜர் ஏற்றார். ஆனால் உபதேசம் பெற்ற மறுநாளே பொது மக்களைக் கூட்டி திருக்கோஷ்டியூர் ஆலய மேல் தளத்திலிருந்து கொண்டு யாவருக்கும் விளக்கினார்கள். பெரியவர் கோபமடைந்து இராமனுஜரை வினவ அதற்கு அவர் நான் ஒருவன் இறப்பதைவிட மற்றவர்களுக்கு இவ்விஷயம் தெரிந்து பற்றி மகிழ்வதாகக் கூறினார்.

பின்னர் திருவரங்கத்தில் ஒரு வைணவ மடத்தில் ஆளவந்தார் மடாதிபதியாக இருந்தார்கள் பின் அவரின் சீடரானார் இராமானுஜர் காலப்போக்கில் இவரே இம்மடத்தின் தலைவரானார்.

ஒரு சமயம் மைசூர் மாநிலம் மேல் கோட்டையில் வைணவ இறைத்தொண்டில் ஈடுபட்டிருக்கும் சமயம் சாதி வேறுபாடின்றி எல்லோரையும் வைணவ சமயத்தில் சேர்த்துக் கொண்டது, பெருமைக்குரிய செயலாகும். இப்படிச் சேர்ந்தவர்கள் தான் திருக்குலத்தார்(இவர்கள் தாழ்ந்த குலத்தவர்களாகும்) இவர் போதித்த வசிஷ்டாவைதம் ஜீவாத்மா, பரமாத்மாவை போற்றி அவரின் தன்மையைப் பெற்று அதன் அருகில் இருந்து கொண்டு தொண்டுபுரிவதே முக்தியாகும் என்றார் முக்திக்கு பக்தி தான் வித்து என போதித்தார். பக்தியால் இறைவன் திருவடி அடைவதை எல்லா உயிகளுக்கும் தொண்டு செய்வதன்மூலம் அடையலாம் என்பது இவரது கருத்து.

இவர் கீதைக்கும் பல உபநிடதங்களுக்கு உரை எழுதியுள்ளார். திருவரங்க ஆலய நித்யபூசைகளை கவனிக்கும் பொருப்பை திருவரங்கத்த முதனாரிடம் ஒப்படைத்தார். ஆலய நிகழ்ச்சிகளின் ஒழுங்கை நிர்ணயித்தார்.

தனது கடைசி நாட்களில் திருவரங்கத்தில் தங்கியிருந்து அரங்கனை சேவித்து அவன் சிறப்பில், மேன்மையில் திளைத்து தமது 120ம் வயதில் இங்கேயே ஜீவசமாதியடைன்தார்கள். இவரே உடையவர், உடையவர் சந்நதி இது முன்பு வசந்த மண்டபமாக இருந்தது. வாழ்க அவர் புகழ் ஸ்ரீதேராமாநுஜா நம.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக