செவ்வாய், 18 மார்ச், 2014

தொண்டரடிப்பொடியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்:  

பிறந்த ஊர்: சோழ நாட்டில் திருமண்டங்குடியில் (இவ்வூர் புள்ளப்பூதங்குடிக்கு அருகில் உள்ளது) இயற்பெயர்: விப்ரநாராயணன். 

அரங்கனுக்குப் பணி செய்யவே திருவரங்கம் வந்தடைந்தார். மாலை கட்டிக் கொடுக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ஊழ்வினைப்பயனால் ஒரு தாசியினால் கவரப்பட்டார். பிறகு பெருமாளையும் மறந்து அந்த தாசியுடனேயே வாழ்ந்து வந்தார். பின்பு அத்தாசி பிரிந்தாள். பிரிவாற்றமையினால் அவள் இருக்குமிடம் தேடிச்சென்ற சமயம் அவளும் இவரை மதிக்கவில்லை. எனவே மீண்டும் துவளத்தொண்டில் ஈடுபட்டு அடியவர்களின் அடிபொடியே உஜ்ஜீவனம் என நினைத்ததனால் தொண்டரடிப்பொடி எனப்பெயர்  பெற்றார். இவர் இயற்றியவை திருமாலை திருபள்ளியெழுச்சி ஆகும் . இவர் திருமங்கை மன்னன் காலத்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக