செவ்வாய், 18 மார்ச், 2014

திருப்பாணாழ்வார்

பஞ்சமவர்ணம் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர். 

காவிரிக்கு தென்கரை உறையூர் வாசம். பாணர் குலம் வீணையேந்தி பெருமாள் புகழ்பாடுவது இவருக்கு பிரியம். இவர் தீண்டப்படாதவர் என்பதறிந்து விலகிச் செல் என்று கூறிய லோகசாரங்க முனிவர் கூறியதை தன்னைத் தான் என்பதறியாது இருந்தபொழுது விலகாமலிருந்ததனால் முனிவர் ஒரு கல்லை எடுத்து வீச கல்லானது திருப்பாணழ்வார் மீது பட்டு ரத்தம் வழிந்தது.
       
பிறகு லோகசாரங்க முனிவர் பெருமாள் திருமஞ்சனத்திற்கு காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு சந்நதி சென்ற சமயம் பெருமாள் கோபம் கொண்டு கதவை திறக்காமலிருக்கச் செய்தார். பிறகு லோகசாரங்க முனிவர் கனவில் பெருமாள் தோன்றி பாணர் நமக்குப் பிரியமானவர் என்றும் நீர் பாணரை உமது தோளில் சுமந்து வருக என்றார். 

மறுநாள் பாணரைத் தேடிச் சென்று நடந்ததை அறிவித்து, வரவேண்டும் என வேண்டினார். தான் எப்படி திருவரங்கத்தை மிதிப்பது என்று கூற, பெருமாள் தெரிவித்தப்படி தோளில் ஏற்றிக் கொண்டு செல்கிறேன் என்றார். பெருமாளிடம் செல்ல பெருமாள் காட்சி கிடைத்தது. “அமலனாதிபிரான்” என்னும் திவ்ய பிரபந்தத்தை 10 பாசுரங்கள் பாடி பெருமாளுடன் ஒன்றறக் கலந்தார். இதில் பெருமாளின் பாதாதி கேச அழகையே அப்பிரபந்தத்தில் விளக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக