செவ்வாய், 18 மார்ச், 2014

ஸ்ரீஆண்டாள்

இயற்பெயர் :கோதை

தந்தை பெரியாழ்வார், பெருமாளுக்கு சாத்துவதற்குத் தொடுத்த மாலையை அவர் இல்லாத சமயம் தான் அதை அணிந்து அப்பெருமானுக்கு பொருந்தி இருக்கிறதா என நிலைக்கண்ணாடியில் கண்டு மீண்டும் குடலையில் வைப்பது வழக்கம். அம்மாலையினை பெருமாள் விருப்பமுடன் அணிந்து வந்தார். 

ஒரு நாள் இதைக் கண்டு தந்தை பெரியாழ்வார் மணம் நொந்தார். அன்று மாலை கொண்டு செல்ல வில்லை. அன்றிரவு பெருமாள் கனவில் தோன்றி பெரியாழ்வாரிடம் மாலை ஏன் கொண்டு வரவில்லை எனவும் இதற்கு நடந்ததை தெரிவிக்க எம்பெருமான் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை தமக்கு மிகவும் விருப்பம் எனவும் இனியும் அம்மாதிரியே தனக்கு அணிவிக்க தெரிவித்தார். 

ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடினார். இவர் ரெங்கநாதரையே மணக்க விரும்பினார். அதன் படியே திருவரங்கம், தந்தையுடன் வந்தார். கோவிலினுள் சென்று திருவரங்கனுடன் சேர்ந்து விட்டாள். இவரின் ஜன்ம தினம் கி.பி 716 எனக் கூறுவோறும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக