செவ்வாய், 18 மார்ச், 2014

பேயாழ்வார் (முதலாழ்வார்கள்)

பேயாழ்வார்:  மயிலாப்பூரில் பிறப்பு இவருடன் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மூவரும் சேர்ந்து முதலாழ்வார்கள் எனப்படுவர். இவர்கள் மூவரும் தனித்தனியே வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருப்பவர்கள். இவர்கள் தங்களை சந்திப்பதும் இல்லை இம்மூவரைக் கொண்டும் உலகம் உய்ய எம்பெருமான் திருஉள்ளம் கொண்டு ஓர் நாள் இரவு திருக்கோவலூரில் மிருகண்டு முனிவர் ஆசிரமத்தில் சந்திக்கும்படி அவர்களுக்கு தெரியாமலேயே செய்தார். அவ்வமயம் முதலில் அவ்வூருக்கு பொய்கை ஆழ்வார் வந்தார். படுத்தார் அது போழ்து பூதத்தாழ்வார் அங்கு வந்து தங்குவதற்கு இடம் கேட்கிறார், பொய்கையார் அவரை வரவேற்று இங்கு ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் என்று தெரிவித்து இருவரும் அவரவர் இறை அனுபவங்கள் பற்றி அளவளாவிக் கொண்டிருக்கின்றார்கள் . அது சமயம் பேயாழ்வார் வந்து தங்க இடம் கேட்டார். மற்ற இருவரும் இவரை வரவேற்று ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் என்று தெரிவித்து மூவரும் எம் பெருமானுடைய குணாநுபவங்களை பரிமாற்றிக் கொண்டு மகிழ்ந்தனர்.

இந்த நல்ல சமயத்தில் எம்பெருமான் அம்மூவருடைய நெருக்கத்தை விரும்பி அவர்களை நெருக்கத் தொடங்கினார். இதனை அறிந்த பொய்கையார் இப்படி நெருக்குவது யாராக இருக்கும் என்று நினைத்து எம்பெருமான் மீது பாடினார்கள். பின் பூதத்தாழ்வாரும் எம்பெருமானை நினைத்து பாடினார். இறுதியாக பேயாழ்வார். “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் (2282)” எனத் தொடங்கி அந்தாதியாகப் பாடினார் அந்தாதி ஒரு பாடலின் கடைசி சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமைத்துப் பாடுவதாகும் இதற்கு மிகுந்த கவனம் தேவை. பொய்கை ஆழ்வார் “ வையம் தகளியாவார்கடலே நெய்யாக (2082)” எனத் தொடங்கியும், பூதத்தாழ்வார் “அன்பே தகளியா ஆர்வம் நெய்யாக (2182)” எனத் தொடங்கியும் அந்தாதியாகப்பாடிப் பரவினார்கள்.

மூவருமே அந்தாத்யாகத்தான் எம்பெருமானின் ஸ்வரூபரூப குணங்களை விபரமாக தாங்கள் அநுபவித்து மற்ற வரையும் அநி[அவொல்லச் செய்த பெருமை அவைகளைச் சாரும். இவர்கள் மூவரும் திருக்கொவலூர் எம்பெருமானை சேவித்து திருமழிசை யாழ்வாரைக் கண்டு அளவளாவி பலகாலம் வாழ்ந்து கடைசியில் திருக்கோவலூர் அடைந்து இறைவனடி சேர்ந்தார்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் சந்நிதி திருவரங்கத்தில் பெரிய கோவிலிருந்து தாயார் சந்நதிக்குச் செல்லும் மேல் வழியாகக் செல்லும் வழியில் வடமேற்கு மூலயில் முதலாழ்வார்கள் சந்நதி என்று ஆதிநாராயணருடன் சந்நதி கொண்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக