சனி, 28 பிப்ரவரி, 2015

திருவரங்க நகரை சுற்றியுள்ள யாத்திரைத் தலங்கள்

தியாகபிரம்மம் தியாகராஜ சுவாமிகள்:

திருஅரங்கன்புகழ் பாடி பரவிய ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் வரிசையில் திருவையாற்றில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் திரு அரங்கனையும் தரிசித்து கீர்த்தனைகள் புனைந்தார்.அவர் சிறந்த ராம பக்தர்.

திரு அரங்கன் தரிசன்த்திற்கு வைகுண்ட ஏகாதாசி விழாசமயம் வந்ததாக அறியப்படுகிறது. அரன்கன் படியேற்ற சேவை கண்டார் என்பதும் பெருமாள் முன்பு அரையர் “முக்கண்ணனுக்கு வினைதீர்த்த பெருமாள்” என்று கட்டியம் கூறுவதை கேட்டிருக்கிறார். மேலும் சிவன் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைகளைந்து விஷயமும் அதனால் ஏற்ப்பட்ட தோஷத்தை நீங்க ஸ்ரீமன் நாராயணன் சிவனுக்கு சுதர்சன மந்திரத்தை உபதேசித்து அத்தோஷம் நீங்கம் பெற்றதையும் நமக்கு நினைவு படுத்துகிறார்.

திருவரங்க யாத்திரை மேற்கொண்டவர்கள் சுற்றிலுமுள்ள திருத்தலங்களான பஞ்சபூதத்தலத்தில் ஒன்றான அப்புத்தலம் திரு ஆனைக்கோவில்(சிவாலயம்) அகிலாண்டேஸ்வரி உடனுரை ஜம்புகேஸ்வரனை தரிசிக்கலாம். ராஜகோபுரத்திற்கு தெற்கே சிருங்கேரி சாரதாம்பாள் சங்கரமடம் உள்ளது. திருவரங்கத்திற்கு தெற்கே 4கிமீ தாயுமான சுவாமி மலைக்கோவில் மாணிக்க விநாயகர் சந்நதி அவசியம் காண வேண்டிய ஓன்று.

இங்கிருந்து எட்டு கி.பில் சமயபுரம் மாரியம்மன் ஆலயம் சக்தி மிகுந்தது இவைகளுக்குச் செல்ல பேருந்து வசதிகள் நிறைய உண்டு.

திருவரங்கத்திலிருந்து வடமேற்கில் திருச்சி-சேலம் பேருந்து சாலையில் 6 கி.மில் திருப்பாச்சிலாசிராமம் சிவன் கோவில் உள்ளது. அங்கு அபூர்வ நடராஜர் சிலை கண்டு தரிசிக்கலாம் நடராஜர் பாம்பின் மேல் நர்த்தனம்

திருவரங்கத்தில் அநேக வசதிகள் உண்டு ரயில் நிலையம் தங்கும் வசதி, தர்மசாலைகள், ராமாநுஜ கூடங்கள், குளிப்பதற்கு காவேரியும் கொள்ளிடமும் உள்ளன. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி பெருமாளை சேவித்து அவன் அருள் பெற்று உய்வோர்களாக வருக. அவன் அருள் பெறுக.

மேலும் வைகுண்ட ஏகாதேசி விழா சமயம்மூலவருக்கு முத்து அங்கி சேவையும் கண்டுள்ளார். அரங்கனை பலவாராக ஸ்வருபரூபங்களை புகழ்ந்திருக்கிறார். அவர் திருமஞ்சனம் செய்வது ராஜோபசாவங்களுடன் செய்வது போல் தோன்றுகிறது என்கிறார். இவர் வைகாசி மாதம் நடக்கும் வசந்தோத்சவ 9ம் நாள் குதிரை வாகன பவனி சேவையை மிகவும் நசித்து அரச பவனியைப் போலத் தோன்றுகிறது என்று கீர்த்தனைபுனைந்துள்ளார்.

இவை அனைத்தும் நான் முகன் கோபுரம்நுழைந்தவுடன் இடதுபுரம் சுவற்றில்  4(நான்கு) பளிங்கு கல் வெட்டுகள் பதிக்கப்பெற்றுள்ளதில் குறிக்கப்பெற்றுள்ளன. சற்று நின்று படித்து இன்புரும்வகையில் அமைந்துள்ளது. நிருவியவர்களுக்கு நன்றி செலுத்துவோமாக. 

அநேக கல்வெட்டுகளில் காட்சியும் நடந்தவைகளுக்கு சாட்சியாக உள்ளன என்றால் அது உண்மையே. 


திருவரங்கம் ஆலயத்தில் விழாக்கள சமயம் பெருமாள் புறப்பாடு குறித்த நேரத்தில் நடக்கிறதுஎன்பதற்கு அறிகுறியாக வேட்டு வெடிக்கப்படும். (punctuality observed)  பக்தர்கள் இதனை அறிந்து தரிசனத்திற்கு தயாராவார்கள்.
தினமும் மாலையில் 6-6.15 மணிக்கு நான்முகன் கோபுரவாசலில் மேல்தளத்திலிருந்து நகார கொட்டுவதை கேட்க்கலாம். 
பெருமாளுக்கு உற்சவங்கள் 10 நாட்களுக்கு நடக்கும். அருள்மிகு ரெங்கநாயகி தாயாருக்கு ஐந்து நாட்களுக்கு நடப்பதுண்டு.

இங்கு ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஜன்மாந்ததிரத்தன்று சித்திரை வீதி உத்திரவீதி பவனி வருவதுண்டு. இங்கே ஸ்ரீமத் ஆண்டவண் சுவாமிகள் ஆஸ்ரமம், பெரியாஷ்ரமம் என்றும் வானமாமலை மடம் என்றும் ஸ்ரீ அகோபில மடம் ஆகிய மடங்களும் திருமாளிகைகளும் உள்ளன. இது மாடமாளிகை சுழ்திருவரங்கம் என்பதற்கு சான்றாகும்.
பெருமாள் பவனி வரும் சமயம் அவருக்கு முன்பு நாலாயிரதிவ்யபிரபந்த கோஷ்டி தமிழ்ப் பாசுரங்களை இசைப்பதும் அவருக்குபின்னால் சமஸ்கிருத வேத பாராயணக் கோஷ்டி இசைப்பதையும்காணலாம்.

முன்னதாக பெரியா குடைகள் செல்லும் தொடர்ந்து யானை முகபடாம்அ/னிந்து அசைந்து செல்லும் பெருமாளுக்கு சற்று அருகில் வெள்ளித்தடி பிடித்து இருவர் செல்வர். இருபக்கங்களிலும் வெண்சாமரம் வீசி வருவார்கள்.
இங்கே நாழிகோட்டன் வாயில் பெயர் எப்படி வந்தது என்பதற்கு சிறுவிளக்கம்.  நாழிகை வீட்டில் வாயில் என்பதாகும். தண்ணீரால் இந்த நாழிகை விட்டில்(பாத்திரம்) இயங்கியதும் இதன்மூலம் நாழிகை தெரிவிப்பார்களாம் எனவே இக் கோபுரத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று  என்று தெரியாருகிறது.

ஆர்யபாடாற் வங்கதேச கொடை தேச அரசன் திரவியம் கொடுக்க கோவிலார் நிர்வாகிகள் அதை ஏற்க மறுத்ததால் திரவியங்களை கோவில் வாசலில் போட்டுவிட்டதாகவும் அதற்கு பாதுகாப்பும் ஏற்பாடு செய்திருந்தனர் . இவர்கள் ஆர்யபடர்கள் இதிலிருந்துஆர்யபடாள் என்று ஆயிற்று என்பர். இவர்கள் திருவரங்கத்திலேயே தங்கியதாலும் கோவில் பாதுகாப்பிற்கு காவலர் பணியிலும் நியமிக்கப்பட்டதாகவும். அவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் இங்கு உண்டு என்பதும் தெரியவருகிறது.

இந்த ஆலயத்தில் தான் எத்தனை விதமான வாயிற்படிகள் குரிப்பிடும்படியாக இங்கே ஐந்து இடங்களில் பெரியதும் சிறியதுமாக யானை உருவைல் அங்குமெங்கும் அமைந்த வயிற்படிகளைக் காணலாம்

1. துவஜலதம்பத்திற்கு கிழக்கே ஊஞ்சல் மண்டபம் ஈறும் வழியில் பெரிய அளவிலும்
2.சேனை முதலியார் சந்நதி வாயிற்படியில் சிறிய அளவிலும்,
3. கிளிமண்டபத்தில் உள்ள கிருஷ்ணன் சந்நதிக்கு ஏறும் வழியில் நடுத்தர அளவிலும்,
4.தாயார் சந்நதிக்கு ஏறும் வழியில்  சாதாரண அளவிலும்,
5. அடுத்து தாயார் சந்நதியிலிருந்து ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியில் அமைந்துள்ள பூமியில் புதைந்துள்ள மிகப் பெரிய அளவிலும் உள்ள யானை உருவங்கள் வடிக்கப் பெற்றிருக்கின்றன. அவசியம் கண்க.


எல்லாமே இங்குபெரியதுதான்

1. பெரிய கோவில் 2. பெரிய பெருமாள், 3. பெரிய பிராட்டியார் 
4. பெருமாளுக்கு ஆண்டாளை தந்த மாமனார் - பெரியாழ்வார்,
5. பெரிய திருவடி,
6. பெருமாளின் புகழ் மேலோன்ற தமிழ் மறைகள்,
7.பெருமாள் பகவத் விஷயம் கேட்பதற்குத் தாமே தேர்தெடுத்த ஆசிரியர்  
  பெரிய ஜீயர் என ஆகின்றது தெரிந்து மகிழ்வோமாக.


சைவத்தில் பாடல் பெற்ற தலங்கள் 274 போன்று வைணவத்தில் மங்களாட்சாசபம் பெற்ற தலம் 108

ஜீயர்  சுவாமிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ராஜகோபுரம் அச்சுதாயர் காலத்தில் கட்டி முடிவடையாமல் விடுபட்டது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். தொண்டிற்கு ஓர் உருவமாய் விளங்குபவர் ஸ்ரீ அகோபில மடம் ஜீயர் சுவாமிகள். வராலாற்று புகழ் மிக்க பணியாகும் இந்த ராஜகோபுரத்திருப்பணி. 

கோவினுள் 51 சுற்றுக் கோவில்களையும் 108 மண்டபங்களையும் தன்ணகத்தே கொண்டது.


பெருமாள் கொண்டை
1. நீள் கொண்டை
2. செளரி கொண்டை
3. வைரமுடி
4. பாண்டியர் கொண்டை
திருமங்கை ஆழ்வார் திவ்யதேச மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலங்கள் 86 ஆகும். வேர்காலம் எட்டாம் நூற்றாண்டு என்பது பெரும்பாண்மையோர் ஏற்கும் முடிவு.

மணவாள மாமுனிவர் வைரத்தூன், மணிக்கொடி ஆழ்வார்திருநகர் அவதாரம். ராமனுஜரின் மறு அவதாரம்.

பிள்ளை பெருமாளையங்கார் தென்கலைசார்ந்தார். வேங்கடவர் இவர் வாயிலாகா பாடலொஎற விளைந்தார். சொல்நோக்கு, பொருள் நோக்கு, தொடை நோக்கு, நடை நோக்கும் விளங்க தமிழ் பாடும் மேதை.

வெங்கடவர் புகழை அந்தாதியாகவும், மாலையாகவும் பாடலானார். பரவசப்பட்டார் வேங்கடவன். இவர் திவ்ய திருமேனியை நின்ற கோலம் காட்டினார். பரந்தாமனின் நின்ற கோலத்தை இருந்த இடத்திலேயே கண்ட பெருமை சொற்கோலம் வல்ல வருக்கு உண்டு நாத முனிகள், ஸ்ரீரெங்கநாதன், நாதமுனிகளின் தந்தை ஈசுவர முனிகள்


பகல் பத்து இராபத்திலும்மாக மூன்று நாட்களுக்கு அரையரிடம் அர்சனைகள் ஸ்ரீசடகோபத்தை தருகினார்கள். சில நாட்கள் தீர்த்தமும் கோஷ்டிக்கு சாத்துகிறார்கள். சஇந்த அரையர் சேவைக்கு கழுநாதமுனிகள்தான் காரணம்.

திரு ஆல வட்டம் (விசிறி கொண்டு விசுவது) 

ஒன்பது நரசிம்கல்


ஜவாலா நரசிம்கல்
அஹோபில நரசிம்கல்
மாலோவ் நரசிம்கல்
கிரோட நரசிம்கல்
காரஜே நரசிம்கல்
பார்க்கவ நரசிம்கல்
யோக நரசிம்கல்
சத்ரவட நரசிம்கல்
பாவந நரசிம்கல்

                                                                                     
உரையாசிரியர்களினால் நாம் பல அரிய வரலாற்று உண்மைகளை எடுத்துகாடும் முகமாக சேமித்து வைத்திருந்தனர். அவர்களின் ஈடு ஓர் கால பெட்டகமாகும்.

இவரால் நாம் அறிவது 1. ஆசாரியார்கள் அடையவளந்தான் திருவீதியில் குடிவாழ்ந்தானர் என்பது இவ்வீதி புறம்பே பெரியகலகங்கள் நிகழ்த்திருக்கின்றனர். அதுசமயம் ஆச்சார்யர்கள் கோவிலுக்குள்ளே புகுந்து பாதுகாபாக தங்கினார்கள். பின்னர் தங்கள் இல்லம் வந்திவிடுவர்.


2. மூன்றாம் குலோத்துங்கன் 1178 – 1218 பாண்டி நாட்டின் மீது படையெடுத்து அரசனை வென்றுவீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் செய்து கொண்டான். இதன்பிறகு பாண்டியனை மூன்றாம் ராஜராஜனை தோல்வியுறச்செய்து விராபிஷேகம் செய்து கொண்டான்.

3. ஜடாவாமன் சுந்தரபாண்டிய தேவர் I  கோடி தேசம் முழுவதும் வென்று பெரிய பெருமனையும் நம்பெருமானையும் சேர்த்து  
கஜதுலாபாரம்ஏறி பொன்னும் மணியும் நவந்திகளும் எம்பெருமானுக்கு சமர்ப்பித்தான். இதனை கோயிலாகா தெரிவிக்கிறது. இவர் காலத்தில்தான் 18 லஷ்சம் நடைபொன் கொண்டு ஸ்ரீபிரணவாகர விமானம் முழுவதையும் பொன்தகட்டில் வேய்ந்து திருபணிசெய்தான் இதனால் இவ்வரசனுக்கு “கோயில் பொண் வேய்ந்த பெருமான் என்ற சிறப்பு பெயர் உண்டு”

இரண்டாம் ராஜராஜனின் விருதுபெயர் சோழேந்திரசிங்கன். இவர் கோவ்ய்லுக்கு ஒரு யானை வழங்கினான் அதன் பெயர் சோழேந்திரசிங்கன்

இது போல் இன்னும் நிறையௌள்ளவாம்.

முன்னர் திக்கோஷ்டியூர் பற்றி சிறுகுறிப்பு கொடுத்திருந்தேன். அங்கு மூன்று நிலைகளிலும் சேவை சாதிபதி தெரிவித்திருந்தேன். எதே போன்று காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில் அழகர் கோவில், மற்றும் திப்போரூர் ஆலயம் ஆகிய ஆலயங்களிலும் மூன்று நிலைகளிலும் கோவசாதிக்கிறார். வாய்ப்பிருந்தால் பக்தர்கள் சென்று சேவிகளாம்.

இத்திருவரங்கம் நான்கு பக்கங்களிலும் சுமார் 15.20 கி.மீ. தூரத்திலிருந்தே நம் கண்களுக்குத் தெரிந்துவிடுகிறது. அவ்வளவு உயரம் திருவரங்கம் அடைந்ததும் ராஜபோபுரத்தி பார்த்து ஏற இரங்கப் பார்க்கலாம். பின் உள்ளே செல்லளாம். இந்த ராஜகோபுர நின்மானத்தின் பிறகு திருவரங்கம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு வருவதையாவரும் அறிவர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      
222222222222222222222222222222222222222222222222222222222222222222222222

ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே சுவர் ஓவியம் கருடன் ஆகமவிதிப்படி வரையப்பட்டது கண்டு மகிழலாம். ஊஞ்சல் மண்டபத்திற்கு கிழக்கே நெய் கிணறு உள்ளது. இப்பொழுது அங்கு நெய் இருப்பதில்லை. அடுத்த ரெங்க விமானத்தை மிக அருகே காண மாடிப்படிகள் உள்ளன.இங்குள்ள மண்டபத்திற்கு அணி அரங்கன் திருமுற்றம் என அழகிய பெயர் உள்ளது. நடுவே பொன்முலாம் பூசிய துவஜஸ்தலம் பலிபீடம் கண்டு இந்த பொன்முலாம் பூசிய துவஜஸதம்பம் (கொடிமரம்) முபாக நமக்கு இடப்புரமாக ஓர் அழகியபறவை விளக்குச்சிலை இருப்பதையும் எப்பொழுதும் தீபம் எறிந்து கொண்டே இருப்பதையும் காணலாம், இது மிகவும் சிறந்த வேலைப்பாடுடன் கூடிய திருவிளக்கு இதன் தலை அலங்காரத்தையும் சடைபின்னலையும் ஆடை அணிகலன் களையும் பார்த்துக் கொண்டிருக்கலாம். தோளின் மீதிஉ ஓர் கிளி அமர்ந்துள்ளது இதனை நோக்குமிடத்து கலைவார்ப்பில் படிப்பில் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைப்படைப்பு என்று கூறினால் அது மிகையல்ல.

இது போன்றதொரு பாவை விளக்கு திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கேசுவரர் ஆலயத்தில் உள்ளது இன்றும் காணலாம் அவ்விளக்கு தஞ்சைமன்னர் ராணியின் அன்பளிப்பாகும். லட்சதீபம் ஏற்றி தானும் தீப நாசியாராக இருப்பதற்கு இது சான்றாக அமைய இப்பாவை விளக்கு வைக்கப்பட்டுள்ளதாம்.



நாழி கோட்டான் கோபுரம் வழியாக பித்தளை கவசமீஅ படிகளைத்தாண்டி உள்ளே சென்று இததுபுரம் பளிங்கு கல்தூண்கள், மண்டபங்கள் பாதுகாப்பு பெட்டகங்கள் அரைகள் விஹயரெங்க சொக்கநாதர் குடும்ப சிலைகள், யாக சாலைகள், நிலைக்கண்ணாடி (முடப்பட்டுள்ளது) உற்சவகாலங்களில் கண்ணாடியில் உற்சவரைக் காணலாம். அடுத்து கிணறு சுற்றி வருகிறோம் இங்கிருந்ட்ஜு ரெங்க விமானத்தி கண்குளிர சேவிக்கிறோம் தேஜோமயமான காட்சி சேனை முதலியார் சந்நதி, இவை அனைத்தும் கண்டபிறகு அஷ்டாஷரப்படி ஏறி அரவனைத் துயிவான் அரங்கனைக் காண கர்ப்பகிரகம் செல்கிறோம் துவாரபாலகர்கள் வணங்கி உள்ளே செல்கிறோம்.

சற்று பின்பு நோக்கும்வோம் ஆர்யபடாள் கோபுரம் நுழைவதற்கு மக்கள் பித்தளைக் கவசம் இட்ட படியைத் தாண்டு முன் தொட்டு வணங்கி செல்வதைக் காணலாம் ஏன்? படியின் கீழே நவக்கிரகங்கள் ஆகியோர் சிலை ரூபமாக இருப்பதே பெருமாளை சேவிப்பதற்குமுன் நவக்கிரகாதிபதிகளை சேவிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. என்பது அறியக் கிடக்கிறது 12 ராசிகளின் ரூபங்களும் உள்ளன 

ஆலயசிறப்புகளின் சில:
ஓம் வடிவில் பிரணாவாகர விமானம், அஷ்டாக்ஷரப்படி நவக்கிரக்க்ப்பிரதிஷ்டை, பாஞ்சராத்ர ஆகம விதிப்படி பூசைகள், பஞ்சரங்கங்களில் ஒன்று பெருமாள் அர்ச்சாரூபியாகக் காட்சி.

சேனை முதலியார் சந்நதிக்கு மேற்கேயும் தெற்கு பக்கமும் முகலாய பாணி கட்டடங்கள் காணலாம். இது முகலாயர்களின் திரும்பணியை நினைவுறுத்தும், இது போன்றே சுவர்கள் ரெங்கவிலாச மண்டபத்தின் அலங்கார மேடைக்கு மேலேயும் கைபிடி சுவர்கள் உள்ளன. சேனை முதலியார் சந்நதியில் சேனை முதலியார், ஆஞ்சநேயர் விபீடணன் உள்ளனர். அடுத்து அரங்கன் ஸ்ரீபாதம் தனிசந்நதி கிழக்கே அர்ச்சுனமண்டபத்தில் துலுக்க நாச்சியார் இவருக்கு மேற்கில் கோகுல வல்லி தாயார் சந்நதிகள் உள்ளன. கிளி மண்டபம் இம் மண்டபத்திற்கு வடக்கே ரேவதி மண்டபம் அதாவது அர்ச்சன மண்டபத்திற்கும் கிளிமண்டபத்திற்கும் இடையில் ரேவடி மண்டபம் உள்ளது.  அடுத்து கிருஷ்ணன் சந்நதி இங்கே கிருஷ்ணன் கையில் சங்கு வைத்திருப்பதி காணலாம். அடுத்து நிலைக்கண்ணாடி. அடுத்து இவருக்குக் கிழக்கே சுவற்றில் திருகுறும்பறுத்த நம்பிகள் படம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.  சீனிவாசனுக்கு மண்ணாலான மலர் சாதிப்பதாம். இம்மலர் அடுத்தநாள் வேங்கடமலியில் மண்மலர் இருப்பதி பட்டர் சுவாமிகள் கண்டு வியப்படிவாராம். திருவரங்கத்தில் சாஅத்துவது திருமலையில் ஏற்கப்படுகிறது  இப்படம் மறைந்துள்ளது சான்று குறித்து காண்க.

ஸ்ரீநிவாசன் அழகு மிகுபடம் அழகிய பெரிய சிறிய கண்ணாடிகற்கள் பதிக்கப்பெற்றுள்ளன. அரங்கனை பாடியவர்கள் ரெங்கனை பாடேன் என்றார் அதுபொழுது அரங்கன் தானே சீனிவாசன் என்றும் சீனிவசனே தான் என்றும் தெரிவித்ததன் காரணமாக ரெங்கநாதர் இங்கு சீனிவாசனாக சேவை சாதிக்கிறாஇ இதை நினைவு படுத்துவதே இவ்வண்ணப்படம் இங்கு உள்ளது, மூன்றாம் சுற்றில் கிழக்குப் பக்கம் பூராவும் திரு அரவிந்த நாயகியார் மடைப்பள்ளி உள்ளது. பெருமாள் சொர்க்க வசலுக்குச் செல்லும் வழியில் மேற்கு பிரகாரத்தில் தெற்கு மூலை கம்பந்தடி கருப்பு சந்நதியும் உள்ளே அவர் மனைவிகளுடன் சுதை சிற்பங்களாக உள்ளதைக் காணலாம்.

இப்பொழுது அரங்கனைத் தரிசிக்கச்செல்வோம் திரு அணுக்கன் திருவாசல் வழியாக வெள்ளிக்கதவுகள் தாண்டி காயத்ரி மண்டபம் இதில் 24 தூண்கள் கொண்டது. சுற்றி வந்து சேவிக்கிறோம். பட்டர் சுவாமிகள் கற்பூர ஆரத்தி ஜோதியில் சிரம் முதல் பாதம் வரியில் சேவையாகிறது அங்கு தீர்த்தம் துளவம் சடகோபம் சார்த்தப்படுகிறது. திருப்புகிறோம் தற்போது கறுப்பு பளிங்கு கற்கல் உள்ளே பொருத்தப்பட்டு வருகிறது.சேவார்திகளுக்கும் பெருமாளுக்கும் இடையில் இருக்கும் கழிக்குக் கணை எனப்பெயர். இக்கணை சில சமயங்களில் வெள்ளியாலனதாக இருக்கும் சில சமயங்களில் பிரமுகர்களுக்கும் ஜியர்களுக்கும் இக்கணையை விலக்கி சேவிக்கச் செய்வதுண்டு இதற்கு கணை வாங்கி சேவை எனப்பெயர்.

உற்சவர்.

உற்சவர்கள் மூவர் உள்ளனர். ஒருவர் உலாவருவார் மற்றவர் யாகசாலியிலேயே இருப்பார். இன்னொருவர் கர்பக்கிரகத்திலேயே இருப்பர் ஒரு சமயம் முகலாய படியெடுப்பால் உற்சவர் கொண்டு செல்லப்பட்டார் இதற்கு  கலாபத்தில் இருந்தார் எனக் கூறுவதுண்டு பெருமாள் 48 ஆண்டுகள் கலாபத்தில் இருந்தார். இருப்பினும் இன்னோரு சான்றின்படி ரெங்கநாதர் 59 ண ஆண்டுகள் கலாபத்தில் இருந்திருக்கலாம் எனக்கூறுகிறது. இதனால் மாலிகபூர் படையெடுப்பில் ரெங்கநாதர் கி பி 1911 ல் அண்டு கொண்டு செல்லப்பட்டு கிபி 1371ல் மீண்டும் வந்திருக்கலாம் என்பதாகும்.



 ராமானுஹர் காலத்தில் பூர்வச்சார்யர்களால் மீண்டும் திருவரங்கம் கொண்டு வரப்பெற்றார். ஆனால் இவர்தான் ஆவ்வுர்சவர் என ஏற்றுக் கொள்ள ஸ்தலத்தார் தயங்கினர் அது ச்மயம் ஒர் முதியவர் சலவைத் தொழிலாளி குருடர் இந்த ஐயத்தை தீர்த்து வைத்தார். எப்படி? சிறுவயதிலிருந்தே பணியில் ஈடுபட்டிருந்ததனால் திருமஞ்சனம் நடந்தவுடன் அந்த பரிமள கந்த வாசனையை நன்கு தெரிந்திருந்தவராதலால் சம்பந்தப்பட்டவர்கள் அவரை அணுகுவது என தீர்மானித்து ஓர் நாள் இரண்டு உற்சவர்களுக்கும் திருமஞ்சனம் செய்வித்து ஈரவாடை தீர்த்ததை தனித்தனியாக அவரிடம் வழங்க கலாபதிலிருந்து மீண்ட உற்சவர் தீர்த்தம் தான் உண்மையான உற்சவர் எனக்கூறினார்.இதில் சிறப்பு என்ன என்றால் கலாபத்தில் இருந்த உற்சவ்ர் மீது அபிஷேகம் செய்த தீர்த்தகத்திற்கு தனி பரிமளகந்தம் உள்ளதை அந்த சலவைத் தொழிலாளி தெரிவித்தார் எனவே இவர் தனிச்சிறப்பு பெற்ற உற்சவர்ர்கிறார். இது அத்தொழிலாளியின் பலவருட அனுபவம் நாமும் சேவிப்போம்.

விபீடிணன் கொண்டு வந்தது பங்குனி மாதம் பெளர்னமியன்று பங்குனி மாதம் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. பெருமாள் சோழ அரச குமாரி கமலவள்ளியை மணந்ததால் அழகிய மணவாளன்.

சேர அரச குமாரி கோமளவள்ளி, பாண்டிய நாடு ஆண்டால் பாண்டிய மன்னன் பல்லக்கில் வைத்து திருவரங்கம் அழைத்து வந்தான் யாவ்ரும் காண ஆண்டாள் கர்பக்கிரகத்தில் சென்று அரங்கனுடன் ஐக்கியமானார். முதலாழ்வர்கள் அடுத்தடுது பிறந்தவர்கள் கடைசி திருமங்கையாழ்வார். ஆழ்வார்களின் சீடர் திருக்கச்சி நம்பிகள்


1875ம் ஆண்டு  இங்கிலாந்து நாட்டு  prince of wals பெருமாலைமிகமதிபதாகக் காட்டி தங்க தாளத்தி அண்பளிபாக அனுப்பியது தெரிகிறது.

திருவரங்க ஆலயத்திற்கு எம்பெருமானடியார்கள் (தேவதாசிகள்) பெருமாள் கலாபத்தில் இருந்த சமயம் அவர்கள் செய்த தியாகம் நிறைய உள்ளன. இவைகளுக்கு  மாறாக ஆலயம் அவ்ர்களுக்கு சில அவ்ர்கள் விரும்பியபடி தேவதாசிகள் இறந்த போதல்லாம் அவர்களுக்கு கோவில் மாலை, பரிவட்டம்,  மடைப்பள்ளியிலிருந்து வாய்க்கரிசியும், கொள்ளியும் கொண்டு போடப்பட்டன. இந்த  பழக்கம் பின்னர் வருங்காலம் வரையில்  நடந்துவந்தது.(நான் சிறு வயதில் தாயார் சந்நதிக்குமுன்பு எம்பெருமானடியார் தூடைத்துடன் கூடிய அபிநயம் செய்ததைக்கண்டிருக்கிறேன்) 

திரு அரங்கன் திருகோஷ்டியூர், நாவலூர் கோவில் திருவனந்தபுரம் கொல்லம், கோழிக்கோடு திருநாராயணபுரம், சத்தியமங்கலம், செஞ்சி ஆகிய ஊர்களுக்கு சென்று வந்ததாக அறியப்படுகிறது. பக்த்தர்கள் குறிப்பாக எம்பெருமானடியார்கள்தான் பெருமான்மீது பற்று கொண்டிருக்கிறார்கள் என்பதறிந்து மகிழ்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக