செவ்வாய், 3 மார்ச், 2015

ஆலய திருப்பணியாளர்கள்

ஆலய திருப்பணியாளர்கள்

சேர, சோழ, பாண்டிய, விஜயநகர ஹொய்சாள அரசர்களே ஆலய திருப்பணியாளர்களாவர். இவர்களில் நந்த சோழனுக்கு குழந்தை இல்லை. பெருமானின் அருளால் தாமரைக் குளத்தில் ஓர் பெண்குழந்தையைக் கண்டெடுத்தான். அவளே கமலவல்லியாகும். கமலவல்லி ஓர் நாள் அழகுமிகு ரெங்கநாதனைக் குதிரையின் மீது அமர்ந்திருப்பதைக் கண்டாள், தவமிருந்தாள் தந்தைக்குத் தெரிந்தது. நந்தசோழன் கமலவல்லியை ஓர் அரசகுமாரனுக்கு மணம் செய்விக்க எண்ணிணான். திருமணத்தை நடத்தினார் (மணமகன் ரெங்கநாதன்) மணமக்கள் ஆலயத்தில் பிரவேசித்து ஜோதியில் கலந்தனர். இவர்களுக்கு அரசன் ஆலயம் நிர்மானித்தார். இதுவே நிசுளாபுரி (உறையூராகும்) நாச்சியார் கோவில் நிர்மாணததை விளக்குவதாகும். பெருமாள் ஓவ்வொரு ஆண்டும் பங்குனிமாதம் உறையூர் சென்று கமல வல்லி நாச்சியார் சேத்தி தரிசனம் கண்டருளூவார் இது ஆதி பிரம்மோத்சவமாகும் திருநாள் விழாவாகும்.

குழசேகரன் திருப்பணி:

இவர் அரசராயிருந்து ஆழ்வாரானவர், ரெங்கநாதருக்குத் தன் மகளை மணம் செய்வித்தார். பவித்ரோத்சவ மண்டபம் கட்டுவித்தார்.

திருவிக்கிரமன்:

நிறைய மண்டபங்கள் சந்நதிகள் கட்டினார், விமானம் கட்டினார். சோழன் ஐந்தாவது சுற்றை கட்டினார், அழகிய சிங்கர் சந்நதியையும் கட்டினார், பாண்டிய மன்னர்கள் சேரகுலவல்லிதாயார் விக்ரகமும், கருடாழ்வார் விக்கிரகமும் செய்வித்தார்கள். உற்சவத்திற்கு விலை உயர்ந்த ஆபரணங்கள், துவஜஸ்தம்பத்திற்கு பொன்முலாம் பூசினார். தினசரி உபயோகத்திற்கு பொன் வெள்ளி சாமான்கள் செய்து கொடுத்தார்கள் திருவிக்ரமன் நான்கு கோபுரங்களையும். உத்தரவீதியையும் நிர்மானித்தார்.

பின்னர் ஓர் முகலாய அரசர் மாலிக்காபூர் தன் பங்காக பெருமானுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார், என்றால் வியப்பாக இருக்கும். மேலும் ஓர் துருக்கர் அரசர் மகள் ரெங்கநாதர்பால் மையல் கொண்டு அவருடன் ஒன்றாகக் கலந்த வரலாறும் உண்டு. ஒரு சமயம் முகலாய படையெடுப்பு காலத்தில் ரெங்கவிக்ரகம் எடுத்து செல்லப்பட்டது. அதனை முகலாய அரசர் மகள் நினைத்து நினைத்து உருகி ரெங்கநாதருடன் கலந்தார். இவருக்கு அர்ச்சுன மண்டபத்தில் தனிச் சந்நதி உள்ளது. இவர் ஓவியமாக் அழகாக (கண்ணாடி பதித்தது) உள்ளார். இவருக்குதான் முதலில் நைவேத்தியம். அரங்கனுக்குப் படைக்கும் நைவேதியங்கள் ஆராதனைகள் இவருக்கும் நடப்பதுண்டு. இவரின் முக்கியத்வத்தை மனதில் கொண்டு ஆலய சம்பிரதாயங்களில் வெற்றிலைக்காம்பு கிள்ளுவது முன்புறம் சுண்ணம் தடவுவது பெருமானுக்கு திருமஞ்சன காலங்களில் கைலி போன்ற ஆடை அணிவிப்பது பிரதி தினமும் கோதுமை ரொட்டியும் வெண்ணையும் அளிப்பது இப்படி துலுக்க சம்பிரதாயம் நடக்கிறது. சுர்தானி நாச்சியாருக்கு தினமும் காலையில் கோதுமை ரொட்டி  மதுரப்பருப்பு கிச்சடியாக பொங்கல் நைவேத்யமாவது இப்பொழுதும் நீடித்து வருகிறது.




மதுரை நாயக்க அரசர்கள்
மதுரையை ஆண்ட நாயக்க அரசர்கள் நிறை திருப்பணிகள் செய்துள்ளார்கள் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஓர் சமயம் கைசிக ஏகாதசி சமயம் கற்பூரப்படியேற்றம் காண சற்று தாமதித்து வந்தார். இடையில் பெருமாள் மூலஸ்தானம் சென்று கொண்டிருந்தார். அது கண்டு நாயக்க அரசர் மீண்டும் கற்பூரப்படியேற்றம் காண விழைந்தார். நிர்வாகிகள் இனி அடுத்த வருடம் தான் கற்பூரப்படியேற்ற சேவை. பெருமாள் மூலஸ்தானம் சென்று வீட்டார், பிறகு திரும்புவது கிடையாது, என்பதும் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மனம் வருந்திய அரசர் அடுத்த வருடம் வரை சீரங்கத்திலேயே தங்கியிருந்து அக்கற்பூரப்படியேற்ற சேவையைக் கண்டு பேரானந்தமடைந்தார் என்பது அறிய வருகிறது.
இதனை நினைவூட்டும் வகையில் அரசரும் அவர் குடும்பத்தாரும் இந்த சிலாரூபமாக கருவூலமண்டபத்தில் கண்ணாடிபெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். அதற்கான அறிவிப்பு பலகையும் அருகில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக