திங்கள், 2 மார்ச், 2015

ஆலய அமைப்பு

Srirangam_Rajagopuram
Srirangam_Rajagopuram
இப்பொழுது ஆலய அமைப்பினை சற்று நோக்குவோம். இதற்கு இருபத்தி இரண்டு கோபுரங்கள் உள்ளன. தெற்கு ராஜகோபுரம், ராயர்கோபுரம் எனவும் வழங்கி வந்தது. இதனை நிர்மானிக்கப் பொறுப்பேற்றவர். அகோபிலமடம் ஜீயர் சுவாமிகள் (இதனை சற்று விரிவாக பின்னர் காண்போம்)

கர்ப்பகிரகத்தை சுற்றி 7 சுற்றுகள் உள்ளன என்பது வழக்கு. 
ஆனால் எட்டு சுற்றுகள் உள்ளன. 

அந்த சுற்றுக்கள் எழும் (7):
 1. தர்மவர்மன் திருச்சுற்று 
 2. இராஜமகேந்திரன் சுற்று (1060-1063)
 3. குலசேகரன் சுற்று
 4. ஆலிநாடன் (திருமங்கை மன்னன்) சுற்று
 5. திருவிக்கிரமன் சுற்று (உத்திர வீதி)
 6. கலியுகராமன் வீதி( மாடமாளிகை சுற்று)
 7. அடையவளஞ்சான் வீதி

முதல் சுற்று எனக் கொள்வது சுவற்றில் குறிப்பிட்டபடி முதல் சுற்று அல்ல கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ளது.  சுற்றி வர வழி வகை உள்ளது. எனவே இதைக் கணக்கில் கொண்டால் 8 சுற்றுகள் எனத் தெளியலாம். 

லயத்தில் பல மண்டபங்கள் உள்ளன. சிறப்பு மண்டபம் ஆயிரங்கால் {1000-தூண்} மண்டபம். இதற்குள் திருமாமணி மண்டபம் உள்ளது இத்திருமாமணி மண்டபம் ரதம் போன்று உள்ளது. ஆகாயத்திலிருந்து வந்து நின்று விட்டது போன்று அமைக்கப் பெற்றதாகும். இருபக்கம் குதிரைகள் பூட்டிய ரதம் போன்று உள்ளதைக் காணலாம். இதனை நோக்குமிடத்து ஒரிசா மாநில கோனார்க் சூரியனார் கோவில் கண்டவர்களுக்கு நினைவு வரும்.

இம் மண்டபத்திற்கு 48 கால்கள் குறைவு அதனை ஈடுசெய்யும் வகையில் விழா சமயம் புதிதாக 48 கால்கள் தென்னை மரங்கள் நட்டு அலங்காரப்பந்தல் அமைக்கப்படும்.

நாலுகால் மண்டபங்கள்
ஆலயத்தில் சிறப்பாக பெரியதும் சிறியதுமாக பளிங்குக்கல் தூண்கள், கொண்ட நாலுகால் மண்டபங்கள் 16 உள்ளன. இவைகளில் தங்கி பெருமாள் சேவை சாதிப்பதும் திருமஞ்சனம் கண்டருளுவதும் உண்டு. கண்டவர்கள் மகிழலாம்.

உபகோயில்கள்
ஆலயத்தில் உபகோவில்கள் நிறைய உள்ளன. 45 சந்நதிகள் அந்தந்த கோவில்களுக்கு தனித்தனியே கிணறு நந்தவனம், மடப்பள்ளிகள் உள்ளன, 
மண்டபங்கள்தான் எத்தனை எத்தனை. கம்பர் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், ரெங்கவிலாச மண்டபம், சந்தனு மண்டபம், காயத்திரி மண்டபம் 24 தூண்கள் உள்ளன , கிளி மண்டபம், அர்ச்சுன மண்டபம், சேஷராயர் மண்டபம், கருட மண்டபம், அலங்கார மண்டபம், வேத விர்ப்பண்ண மண்டபம், துரை மண்டபம் (இங்கு வரஜா நதி ஓடுவதாக ஐதீகம்) உட்கோடை மண்டபம், வெளிகோடை கேடா குழிமண்டபம் ஆகியவையாகும்.

முக்கிய சந்நதிகள் மூன்று, 
அவை
1.ஸ்ரீரெங்கநாதர்
2.ஸ்ரீரெங்கநாயகி (தாயார்) சந்நதி
3.ஸ்ரீசக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார் சுதர்ஸனன்:
ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வார்
உத்ஸவர் அஷ்டபுஜம்: 8 கரங்கள். இவருக்குத்தான் திருமஞ்சனம். திரிநேத்தரம். மூன்றுகண்களை உடையவர். சுதர்ஸனன் எல்லா கிரகங்களுக்கும் அதிபதி. இவரை சுற்றி தீப்பிழம்ம்பு உள்ளது. ஜவாலா கேசம் எனக் கூறுவது உண்டு. இவர் உற்சவர் என்றாலும் உலாவருவதில்லை.இவருக்கு நன்கு கரங்கள் உள்ளன.

மூலவர் சோடஜபுஜம் 16 கரங்கள்.  இவருக்கு திருமஞ்சனம்கிடையாது. தைலகாப்பு சாத்துவது உண்டு. இவருக்கு பின்புறம்  யோகநரசிம்மன் வடிக்கப்பெற்றுள்ளார். இது எங்கும் உள்ள வழக்கமாகும் காரணம் நரசிம்மரும் உக்கிரம்மிக்க தெய்வங்காளாக இருப்பதே. 

இங்கே சைவ வைணவ பேதமில்லை என்பதை நிருபிக்கும் முகமாக நடராஜர் இரண்டில் பலி பீடத்தில் (ரெங்கவிலாஸ மண்டபத்தில் உள்ளது) வடக்கு பக்கம் ஐவரில் நடுவர்  வெள்ளைக்கோபுரத்தில் உள்ளே இருந்து வெளியில் போவதற்குமுன்பு இடதுபுரம் கோபுர கீழ்தலத்தில் அருகாமையில் ஒருவர் மற்றும் சேஷராயர் மாண்டபத்தில் தெற்கு பக்கம் மண்டபத்தில் இடதுபுரம் 3வது தூணில் ஒருவராக (முயலகன் மீது உள்ளார்) மற்றவர்கள் தாண்டவ தரிசனம் மட்டும் ஆக மூவர் உள்ளனர். மேலும் பிஷாடனார் சிலை ஒன்று கருடமண்டப வடக்குபக்கம் கீழ்வரிசை தூண்களில் உள்ளது. சேஷராயர் மண்டபத்தில் அற்புதச்சிலைகள் என்று சொல்லும் அளவிற்கு அழகாக வடிக்கப்பட்ட சிலைகளில் குதிரைகளின் வால்கள் கீழ்நோக்கி சரிந்துள்ளன மேலும் கடைசி தூனில் குதிரையின் வால் மேல் நோக்கி வளைந்துள்ளது. இவைகளில் நாம் காணுவது தூணின் இரண்டுபக்கங்களிலும் வால்கள் தெரிகின்றன. (இது எப்படி இருக்க முடியும் என்பது வியப்பாகத்தெரிகிறது)

ஸ்ரீகோதண்டராமர் சந்நதி உள் ஆண்டாள் சந்நதி, லஷ்மிநரசிம்மர் சந்நதி மேல அடையவளஞ்சான் வீதியில் வெளி ஆண்டாள் சந்நதி உள்ளது. ராஜகோபுரம் அருகே குறளப்பன் சந்நதியும் உள்ளது மற்றும் பல தாயார் சந்நதிகள் துலுக்க நாச்சியார் சேரக்குலவல்லி, கலாபசம்ரஷகி, விஜயவல்லி தாயார் சந்நதிகளும் உள்ளன.

புஷ்கரணிகள் இரண்டு சந்திரபுஷ்கரணி, சூர்யபுஷ்கரணி (இது தற்சமயம் வழக்கில் இல்லை) 

Gopuram _ Srirangam
கோபுரங்கள்: 
ராயர் கோபுரம், 
கார்த்திகை கோபுரம், 
ஆர்யபடாள் கோபுரம், 
நாழிக் கோட்டான் கோபுரம். 
(இக்கோபுரம் வாயில் பித்தளை படிகளும் சிறிது உயரத்திற்கு பித்தளை தகடும் வேயப்பட்டு உள்ளது திருப்பணி செய்தவர் ராஜ்பகதூர் பலராமானுஜர் செட்டியார் துனைவி எத்திராஜம்மாள் 1930ம் வருடம் என குறிக்கப்பட்டுள்ளதை காணலாம்.)

சொர்க்கவாசல் கோபுரம், 
வெள்ளைகோபுரம்
இவைகளுடன் மூன்று கோபுரங்கள் கட்டப்படாமலேயே மொட்டையாக உள்ளன. மேற்சொன்ன சொர்க்கவசல் கோபுரம் வைகுண்ட ஏகாதசி விழாசமயம் 12 நாட்களுக்கு மட்டும் திறந்திருக்கும்.

இங்கே ராமர் சந்நதிகள் ஐந்து உள்ளன. இவைகளுடன் எல்லா ஆழ்வார்களுக்கும்,  ஆச்சார்யர்களுக்கும் தனிச் சந்நதிகள் உள்ளன. பின்னர் விபரமாக விளக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக