சனி, 21 மார்ச், 2015

சிறப்பு வழிபாடுகள்

இங்கு நடக்கும் விழாக்களுடன் ஆண்டாள் சந்நதியில் மார்கழி மாதம் திருபாவை பாடல் பாடப்பெற்று விளக்கம் செய்யப்படுவதுண்டு. ஆடிப்பூரம் விழாவும் நடக்கும். அந்த நாளில் ரெங்கநாதர் கண்ணாடி அரை சேவை சாதிப்பார். தொடர்ந்து பழங்கோல சேவை அதாவது ஸ்ரீ ஆண்டாள் ரெங்கநாதருடன் முன் இரவு இருந்த்தாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.



தினமும் பெருமாள் துயில்வதற்கு வீணை வாத்திய இசை வழங்கப்படுவதுண்டு இத்துடன் அன்றைய நிகழ்ச்சி பூர்த்தி செய்யப்பட்டு சந்நதி திருக்காப்பிடப்படுகிறது.



தினமும் இரவில் அரவணை என்னும் நைவேத்யம் ஆதிசேஷனுக்கு அமுது செய்வதுண்டு. பெருமாள் திருமஞ்சனம் கண்டருளும் பொழுது கைலி சார்த்திக் கொண்டும் சகஸ்ரதாரை அபிஷேகம் நடப்பதைக் காணலாம். இதற்கு 1000 ஓட்டைகள் கொண்ட பொன் அல்லது வெள்ளி சல்லடை பயன்படுத்துவார்கள். தீர்த்தம் சங்கு வடிவில் உள்ள கலம் உபயோகிக்கப்படும். ஆயிரம் ஓட்டைகளில் நீர்விழுவதைக் காண்பது கண் நிறைந்த காட்சியாக அமையும் நேரில் கண்டு இன்புருங்கள். வருடத்தில் நான்கு முறை கருட சேவைகள் உள்ளன சித்திரை, தை , மாசி, பங்குனி மாதங்களில்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக