சனி, 21 மார்ச், 2015

அருந்ததியார் கைங்கர்யம்

ரெங்கநாதருக்கு ஆண்டிற்கு ஒரு தடவை அருந்ததியார்(செருப்பு தைக்கும் தொழிலாளர்) பாதரஷை ஒன்று மட்டும் தயாரித்து வழங்குவது உண்டு அவர்கள் அந்த நாளில் ஆலயம் வந்து பாதரஷையினை கொடுத்து விட்டு தீர்த்தப் பிரசாதம் பெற்று மாலை மரியாதைப் பெற்றுத் திரும்புவர். அந்த பாதரஷை திருக்கொட்டாரத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அருந்ததியார் குடும்பத்தாருக்கு பெருமாள் கனவில் தோன்றி மணலில் அளவுக்காட்டி மறைவதாகவும் அதனை ஏற்று பாதரஷை செய்து கொண்டு வந்து அளிப்பார்களாம். இப்பாதரஷைகள் பெரியதும் சிறியதுமாக அழகாகவும் செய்து வழங்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக