ஞாயிறு, 1 மார்ச், 2015

இன்னும் சில சிறப்புகள்

சில சிறப்பு விஷயங்கள்
1. மூலவருக்கு வருடத்தில் இரண்டு தடவை சந்தனத் தைலக்காப்பு சாத்துவதுண்டு. 40 நாட்களுக்கு இது நீடிக்கும். இடைப்பட்ட வெள்ளிக் கிழமைகளில் புணுகு சாத்துவதில்லை .

2.உற்சவர் உலாவரும் சமயம்  சந்தர்ப்பத்திற்கு தகுந்தார்ப்போல் நடையை மாற்றுவார்கள் சர்பகதி, ரிஷபகதி, சிம்மகதி, கஜகதி என உள்ளன அநுபவித்தால் விளங்கும்.

3. சந்திரபுஷ்கரணி அருகே உள்ள கோதண்டராமர் சாளக்கிராம மாலைகள் இரண்டு அணிந்துள்ளார் ஒன்று நேபால் அரசு அளித்தது. மற்றொன்று பிரிட்டிஷ் அரசு ஆளுநர் ராபர்ட்கிளைவ் பிரபு வழங்கியதாகும். இங்கே சேதாதேவிக்கு அணியும் சேலை 18 முழம் கொண்டதாகும், சாதாரணமாக இங்கே மார்கழி மாதம் பூராவும் குளிர் மாதமானதால் மூலவர்கள் வெல்வெட் ஆடையில் இருப்பதைக் காணலாம்.

4. இந்த ஆலயத்தில் தேங்காய் உடைத்து அமுது செய்வதில்லை முன்னார் தேங்காய் உடைத்து திருவல் செய்து நாட்டுச்சர்கரை கலந்து அதன் பின்னரே அமுது செய்யப்பட்டு வந்தது இதற்கு காரணம் உடைப்பு ஒலி அவரின் உறக்கத்திற்கு இடையூறாக அமையும் என்பதுதான் இதைத்தவிர்க்கவே மேற்கண்ட ஏற்பாடு இதிலே சில சிரமங்களும் அனுபவிக்கப்பட்டன தற்சமயம் பக்தர்களின் திருப்திக்கு ரெங்கவிலாச மண்டபத்தில் உள்ள கல் துவஜஸ் தம்பம் பலிபீடம் அடியில் தேங்காய் உடைக்கப்படுகிறது. இது போன்று குணசீலம் அருள்மிகு சீனிவாசன் சந்நதியிலும் தேங்காய் துருவல் இருந்து நின்றுவிட்டது. அதற்கு பதிலாக கல்கண்டு பழம் அமுது செய்யப்படுகிறது.

5. ஆலயத்தில் ஆலய மணிகள் இரண்டு உள்ளன. இவைகள் அடித்து ஓசையினைக் கேட்க சந்தர்ப்பம் வாய்க்காது. ஏனனில் அடிப்பது கிடையாது.

6. இந்த ஆலயத்தில் பெருமனுக்கு கைங்கர்யம் செய்பவர்களுக்கு மாத ஊதியம் கொடுக்கப்ப்டுவதில்லை.

7. பெருமாள் அருகிலிருந்து பூசைகளில் பங்கு கொள்ளும் கைங்கர்ய பக்தர்கள் தென்கலையார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

8. உற்சவருக்கு கஸ்தூரி திலகம் எவ்வித காரணத்தினாலும் களையப்படாது. மூலவர் சேவை சாதாரணமாக கைவிளக்கு சேவையில் நட்க்கும் தைலக்காப்பு சாத்தப்பட்ட 40 நாட்களுக்கு கற்புர ஆரத்தியில் மட்டும் தான் சேவையகும்.
மொத்ததில் இந்த ஆலயம் மானுட செயல்பாட்டில் ஒன்றி விட்டதாகக் கூறலாம் அன்றாட அலுவல்களை கவனிப்பதற்கும் இறைவனை தரிசிப்பதற்கும் ஈடுபடும் வகையில் அமைந்துள்ளது எனலாம் கர்பக்கிரகத்தை விட்டு வெளியில் வந்து மீண்டும் கர்ப்பக்கிரகம் சேரும் பொழுது கோவிலினுள்ளே  திருவந்திக்காப்பு 2ம் பிரகாரத்தில் நடக்கும் . வெளியில் உலா சென்று வந்தால் நான்முகன் வாசலுக்கு அருகே  உள்ளே திருவந்திகாப்பு மண்டபத்தில் திருவந்திகாப்பு நடப்பதுண்டு. திருவ்ந்திக்காப்பு நடப்பதற்கு முன்பு சம்பதம்பட்டவர்களுக்கு பரிவட்டம், மாலை அணிவிக்கப்பெற்று தீர்த்தம் சந்தனம்  சட கோபம் சாத்டப்பட்டுகிறது. பின்பு ஊறவைத்த பாசிப்பருப்பு வெல்லம் ஏலக்காய் கலந்தும், பானகமும் வழங்கப்படுகிறது.
பெருமாள் உலாவரும் சமயம் முன்பாக வெள்ளி வேத்ரங்கள் தாங்கி இருவர் முன் செல்ல்வர், பெருமாளுக்கு வலது பின்புரம் சிறு வெள்ளிக்கோல் உடன் வரும் இவருக்கு பின்புரம் பொற்குடை பிடித்து வரப்படும் ஒருவர் பெருமாளுக்கு வெல்வெட் துணியினாலான விசிறியினால் வீசிக்கொண்டேயிருப்பர்.  தாங்குபவர்கள் ஸ்ரீபாதம் தாங்கிகள் எனப்படுவர் இவர்கள் விழாக்காலங்களில் மணியக்காரர் அறிவிப்பு கொடுத்தது யாவரும் வரிசியாகச் சென்று பெருமாளை கர்ப்பக்கிரகத்திலிருந்து தாங்கி வருவார்கள்.
அதற்கு அடையாளமாக பறை ஒலி இதற்கு தனித்தாளத்துடன். இசைக்கப்படும் வீரவண்டி ஒலிக்கப்ப்டும். அத்துடன் சேமங்குலம் மணியும் தனித்தாளத்துடன் பறை ஒலியுடன் ஒன்று போல் இணைந்து ஒலிக்கப்படும்.

ஏகாதாசி விழா சமயம் ஆலய இரண்டாம் சுற்றில் ஏராளமான பக்தர்கள் கூடுவதால் அன்று முன் கூட்டியே தூபம் போடப்படும். இது நறுமணம் மிக்கதாயிருக்கும் சுற்றுபுரத் தூய்மைக்கு உதவுகிறது பெருமாள் உலாவரும் சமயம் முன்னதாக நாலாயிரதிவ்யபிரபந்த பாசுரங்கள் பாடப்படும் அவருக்கு பின்னால் வேதபாராயணம் செய்வது இன்றும் காணலாம்.

தினமும் தாயாருக்கு மாலை வேலையில் பெருமாளுக்கு சாத்தப்பெற்ற மாலைகள் கொண்டு செல்லப்படுகிறது.

திருவரங்கம் தாயார் சந்நதிக்கு எதிரே அமைந்திருக்கும் மேட்டு நரசிம்மர் பற்றி சிறிது விளக்குவோம். எதிரே கம்பர் மண்டபம் இங்கிருந்து தான் கம்பர் இராம காதையை அரங்கேற்றம் செய்தார் என அறிவிக்கும் குறிப்பு கம்பர் 801-885 அறிவிக்கிறது அரங்கேற்ற இறுதிநாள் கம்பருக்கு இடப்பக்கம் உள்ள நரசிம்மர் கம்பரின் திறமையை மெச்சி சிரித்து கையை உயர்த்தி (சிரக்கம்பம் கரக்கம்பம் செய்து) தன் ஆசியை வழங்கியதாகக் கூறுவர் மூலவர் சிலாரூபம் சிறிய உருவம் இங்கு தீர்த்தம் பானகம் மண்டபத்தில் நரசிம்மர் ஓவியங்கள் கண்டு மகிழலாம் இந்த அரங்கேற்றத்திற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டவர்கள் ஆளவந்தார் சுவாமிகள். இந்த சித்திரத்தில் ஹிரண்யன் வதத்தினால் சாபவிமோசனம் பெற்று பறவை உருப்பெற்றான் என்பதை காண்கிறோம்.

இவ்வாலயத்திற்கு நன்கொடை அளித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். நம் பாரத தேசம் முழுவதும் உள்ளனர் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக